*குடும்ப கலை*
------------------------
பதிவு - 5
நல்ல மனிதர்களின் கூட்டுறவால் நல்ல குடும்பம் உருவாகின்றது. நல்ல குடும்பம் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றது.
குடும்ப உறவுகள் சீராக இல்லை என்றால் மனிதனின் மனம் அமைதியாக இருக்க முடியாது. மனிதன் தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக ஏற்படுத்தியதே குடும்பம்.
மனித புரிதல் மாறுபாடுகளுடன் இருப்பதால் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் ஏற்படுகின்றது. இதை புரிந்து கொண்டால் எல்லாரும் மதிக்கத் தகுந்தவர்கள் என்பதும் என்றாவது ஒருநாள் எல்லாருக்கும் உண்மை புரியும் என்றும் உணரலாம்.
நீயா? நானா? என்ற போட்டி மனப்பான்மை வளர்ந்து குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுகின்றது.
நாம் எதிர்பார்க்கும் விதத்தில் பிறர் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். அப்படியே பிறரும் நம்மை எதிர்பார்க்கின்றனர். பிறரின் எதிர்பார்ப்பிற்கு ஈடு கொடுக்க முடியாமல் நாமும் நமது எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி மாறமுடியாமல் பிறகும் தவிக்கிறோம்.
*குரு சிவயோகி*
*யோகக்குடில் / 9710230097*
www.yogakudil.org /
youtube : sivayogi
#Sivayogi | #Yogakudil
#Yoga | #Tamilyoga
#Kadavul | #Guru | #Master
#Tamilmotivational
🍒🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿
No comments:
Post a Comment